மூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்…!!

Read Time:3 Minute, 19 Second

3foods_001-615x431மனநிலை மாற்றங்களுக்கும், எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்(Neurotransmitter) என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன.

நம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை தயாரித்துக் கொள்கிறது.

இதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை மருந்து போல செயல்பட்டு, நம் மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மீன்

புரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக இருக்கும் போது, மூளையின் செல்கள் டோபமைன் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கின்றன.

நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. டோபமைனை உபயோகிக்கும் மூளை செல்களை பாதுகாக்க, மீன் உணவு அவசியம்.
மீனில் உள்ள ஒமேகா 3 செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம்.
வல்லாரைக் கீரை

வல்லாரையிலுள்ள Bromic Acid நினைவாற்றலுக்கு உதவுபவை. கரும்பச்சை கீரை வகையைச் சார்ந்த வல்லாரையில் டி.ஹச்.ஏ. இருப்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. மகத்துவம் வாய்ந்த வல்லாரையை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் Colin உள்ளது. இது அசிடைல்கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்க தேவைப்படுகிறது. அசிடைல்கோலின், மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.

அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.

சிலர் முட்டையின் மஞ்சள் கருவை கொலஸ்ட்ரால் என்று ஒதுக்கிவிடுவர். இந்த மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் மூளையின் நரம்பு செல்களை சுற்றியுள்ள அடுக்குகளுக்கும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கும் முக்கியமானது.

முட்டையில் DHA எனும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து போனதாய் கருதியவர் உயிருடன் திரும்பிய அதிசயம்: நடந்தது என்ன..!!
Next post மஸ்கெலியா ஓயாவில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு…!!