இங்கிலாந்து கடைகளில் மாட்டு சிறுநீர் விற்பனை: சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு..!!

Read Time:2 Minute, 9 Second

cb044cb7-ddbf-444f-8ffb-f92753bebd1b_S_secvpfஇந்தியாவில் இந்துக்கள் மத்தியில் மாட்டு சிறுநீர் புனித பொருளாக கருதப்படுகிறது. ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளில் மாட்டு சிறுநீரை பயன்படுத்துகிறார்கள்.

இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். அவர்கள் மாட்டு சிறுநீரை பூஜைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், அங்கு மாட்டு சிறுநீர் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே, இங்கிலாந்தில் உள்ள ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா அமைப்பு மாட்டு சிறுநீரை பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு விடுகிறது. இதற்காக மாட்டு பண்ணை ஒன்றையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.

இந்த சிறுநீர் பாட்டில்கள் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. உணவு பொருட்களுடன் இதையும் அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள்.

ஆனால், இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மாட்டு சிறுநீரை விற்பதால் அவை அருகில் உள்ள உணவு பொருட்களில் பரவி சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

மேலும் இங்கிலாந்தில் மாட்டு சிறுநீர் விற்பனை செய்வது சட்ட விரோதம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். ஆனால், இந்து அமைப்பினர் மாட்டு சிறுநீரால் எந்த பிரச்சினையும் இல்லை. இவற்றை விற்க தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீயிலிருந்து காப்பாற்ற 2–வது மாடியில் இருந்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய தாய்…!!
Next post சர்க்கரை ஆலை வளாகத்தில் தொழிலாளர்களை பயமுறுத்திய 14 பாம்புகளை பிடித்த இளம்பெண்…!!