சீனாவில் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 18 நாள் பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறை…!!

Read Time:2 Minute, 1 Second

cf306921-2209-4544-823e-82ac003af3a3_S_secvpfசீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள டோங்கான் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அத்தாட்சியாக திருமணமே செய்யாமல் கள்ளத்தொடர்பின் மூலம் ஒரு பெண்குழந்தையை அந்தப்பெண் பெற்றெடுத்தாள்.

அந்தக் குழந்தையை வளர்க்க தேவையான வசதி இல்லாத நிலையில் அந்த வாலிபருக்கு நவீனரக ஐபோன்களின்மீதும், அதிவேக மோட்டார் சைக்கிள்கள்மீதும் சமீபத்தில் தீராத மோகம் ஏற்பட்டுள்ளது. இந்த மோகத்தின் உந்துதலால் பிறந்து 18 நாளேயான தனது பெண் குழந்தையை இணையதளம் மூலம் விற்றுவிட தீர்மானித்தார்.

குழந்தை பாக்கியம் இல்லாத தனது சகோதரிக்காக அந்த குழந்தையை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்த ஒருவர், 23 ஆயிரம் யுவான்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய்) அந்தக் குழந்தையை வாங்கினார். இதுதொடர்பான தகவல் மெல்லமாக கசிந்து, உள்ளூர் போலீசாரின் காதுகளைச் சென்றடைந்தது.

இதையடுத்து, அந்த வாலிபரை கைது செய்த போலீசார், அவர்மீதும் குழந்தையை வாங்கியவர்மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் இருவருக்கும் முறையே மூன்றாண்டுகள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!
Next post வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!