ஈராக்கில் அமெரிக்க ராணுவம் அடுத்த ஆண்டு இறுதிவரை தங்கி இருக்க அனுமதி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

Read Time:1 Minute, 25 Second

irak.gifஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் ராணுவம் அடுத்த ஆண்டு (2008) இறுதிவரை தங்கி இருக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்து உள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது ஈராக்கில் அரசாங்கம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை அமெரிக்க ராணுவம் தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு கவுன்சில், ஒரு தீர்மானம் இயற்றி இதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த தீர்மானத்தில், ஈராக் அரசு விரும்பினால், அதற்கு முன்னதாக கூட அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் ஒரு வாசகம் சேர்க்கப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகும் கூட அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தங்கி இருக்க முடியும். ஆனால் அதற்கு ஈராக் அரசாங்கம் சம்மதிக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சீனாவில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியையைக்கு மரணதண்டனை
Next post படம் பிடிக்க முயன்றவரை கடித்துக் கொன்ற புலிகள் அசாம் மிருக காட்சி சாலையில் பயங்கரம்