பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்தது; 50 பேர் பலி

Read Time:1 Minute, 53 Second

3.gifபாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அந்த ரெயிலில் ஏராளமானவர்கள் வெளி ïர்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண் டிருந்தனர். அந்த ரெயில் சிந்து மாகாணத்தில் கராச்சியை அடுத்துள்ள நவாப்ஷா பகுதியில் வந்த போது திடீர் என்று கவிழ்ந் தது. 17பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் தண்டவாளத்தின் அருகே உள்ள குளத்தில் விழுந்தன. இதில் 50பயணிகள் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம்அடைந் தனர். இடிபாடுகளுக்கு இடை யில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது வரை 50 உடல்கள் மீட் கப்பட்டுள்ளதாக மீட்பு படையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதியில் கும்மிருட் டாக இருந்ததால்உடனடி யாக மீட்பு பணியை மேற்கொள் வதில் தாமதம் ஏற்பட்டது. தண்டவாளங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாச வேலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு ஜலை மாதம் ஜோத்சி அருகே 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 130 பேர் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் உடல் 22-ந் தேதி ஐதராபாத் வருகிறது
Next post இளம்பெண் கற்பழிப்பு வழக்கு; சாட்சி சொல்ல இருந்த பெண் மீது தாக்குதல்; தந்தை – மகன் கைது