பின் லேடனை வெறுக்கும் சவூதி அரேபியர்கள்

Read Time:2 Minute, 45 Second

binladen.gifஅல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் பின் லேடனை சவூதி அரேபியர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. சவூதி அரேபியாவில் பின் லேடனுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்றும், அவரால் தொடங்கப்பட்ட அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றனர் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 15 சதவீதம் பேரே பின் லேடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது அல்-காய்தா தீவிரவாத இயக்கத்துக்கு 10 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை வெளியான கருத்துக் கணிப்பில் இந்த விவரங்கள் உள்ளன. தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சவூதி அரசு எடுத்து வருகிறது. அண்மையில் மெக்காவுக்கு வரும் யாத்ரீகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேலும் கடுமையாக்கியுள்ளது. பின் லேடனுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு 12 சதவீத அரேபியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் முகமது அகமது நிஜாத் மீது பெருவாரியான சவூதி அரேபியர்கள் நல்ல அபிப்ராயம் தெரிவித்துள்ளனர்.

சீனாவைக் காட்டிலும் அமெரிக்கா மீது 40 சதவீதம் பேர் சிறந்த அபிப்ராயம் கொண்டுள்ளதும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு 36 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு கூட்டத்தினரால் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு 100 கசையடியும் 6 மாத சிறைத் தண்டனையும் அளித்தது சரியே என்று 15 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஞ்சியோர் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களிடம் கேலி: இருவர் கைது
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…