அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை
ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை சோலோத்சோவ் (படம்), செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐரோப்பிய கண்டத்தில் இரு இடங்களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா தனது இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், போலந்து, செக் குடியரசு ஆகிய இரு இடங்களில் நாங்களும் ஏவுகணைத் தளங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே தீவிரப் பரிசீலனையிலும் உள்ளது. தாங்கள் அமைக்கவுள்ள ஏவுகணைத் தளத்தில் ஒரு சில ஏவுகணைகள் மட்டுமே இடம்பெறும் என்றும் மேலும் அந்த ஏவுகணைத் தளங்கள் ஈரான் போன்ற ரெüடி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்தக் கருத்தை எவ்விதத்திலும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.
ரஷியாவை சுற்றி ஏவுகணைத் தளங்களை அமைத்து எங்களை மிரட்ட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்பது அதன் நடவடிக்கை மூலமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
எங்களுடன் உடன்பாடு ஏற்படுத்தினால்…: ஒருவேளை, எங்களுடன் (ரஷியா) அமெரிக்கா உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் கூட போலந்திலும், செக் குடியரசிலும் எதிரி நாட்டு ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் 10 ஏவுகணைகளையும், ஒரு ரேடாரையும் மட்டுமே இடம்பெற அனுமதிக்கப்படும். ஏதாவது ஒரு நிலையில் இந்த உடன்பாட்டை அமெரிக்கா மீறும் பட்சத்தில் உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் ரஷியா தயங்காது.
நாங்கள் ரஷியாவை மிரட்ட முயற்சிக்கவில்லை என அமெரிக்கா கூறிவருகிறது. ஆனால், இதுபோன்ற வெற்று வாக்குறுதிகளையும் நாங்கள் நம்பத் தயாராக இல்லை.
கடந்த காலத்தில் இதுபோன்று நம்பியதால்தான் நேட்டோ படை ரஷியாவை சுற்றி வளைத்தது. தற்போது அமெரிக்கா கூறுவதை நாங்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்பினால் அதே நிலைமை மீண்டும் ஏற்படலாம்.
துண்டுபட்டுக்கிடந்த இரு ஜெர்மனிகளும் இணைந்தவுடன் அங்கு ஒரு நேட்டோ படை வீரர் கூட இருக்கமாட்டர்கள் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அமெரிக்கா அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு ரஷியாவை ஏமாற்றியது என்றார் நிகோலை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...