என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்
என் வளர்ச்சியை பார்த்து பயந்து தான் திமுக இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணைந்தனர். அந்த விழாவில் விஜய்காந்த் பேசுகையில், மக்களிடம் பிரமையை ஏற்படுத்தவும், தங்களிடம்தான் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் இளைஞர் மாநாடு நடத்துகின்றன. இந்த மாநாடு திமுக இளைஞர் அணி மாநாடா தமிழக அரசின் மாநாடா என்பதை மக்கள் அறிவார்கள். புதிதாக துவங்கிய கட்சியெல்லாம் பகுதி நேரங்களாக வந்து மறைந்து போகும் என்று கூறியுள்ளனர். அவர்கள் பேசியதை பார்த்தால் நான் வளர்ந்து வருவதைக் கண்டு பயந்து போய் மாநாட்டை நடத்தியது தெரிகிறது. ஜாதி, மத சண்டையை வெறுப்பவன் நான். ஜாதியை பார்த்து சோறு போடுவதில்லை. ஒரே ஜாதி சங்கத்தினருக்கு எத்தனையோ தலைவர்கள். ஜாதி அமைப்புகள், பிரிவு இவை எல்லாம் தேவையற்றது என்பதால் தான் தேமுதிகவில் ஜாதி, சிறுபான்மை பிரிவு இல்லை. ஏழ்மையை போக்குவது தான் அரசாங்கத்தின் பணி. எதையாவது சொல்லி ஓட்டுக்களை வாங்குபவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். மாபெரும் இயக்கங்களை எதிர்த்து வருகிறோம். தேமுதிகவிற்கு தான் இனி ஓட்டு என்ற மாபெரும் புரட்சியை உங்களால் தான் உருவாக்க முடியும்.
கொள்கை இல்லையென்று கூறுகின்றனர். 5 வருடத்தில் மாறிமாறி கூட்டணி அமைத்துக் கொள்வது கொள்கையா. என்னை பொறுத்தவரை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தர வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று யாரை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள். இலவச கலர் டிவிக்கள் விற்பனை நடப்பதாக நான் முன்பே கூறியதை கண்டு கொள்ளாதவர்கள், இன்று விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று கூறுகின்றனர்.
50 ஆண்டு காலமாக எங்கள் கட்சி தான் பலமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இடையிடையே காணாமல் போனார்களே ஏன். குறிப்பாக 1977 முதல் 87 வரை மக்கள் மன்றத்தில் தலை காட்ட முடியாமல் போனது ஏன். எனவே மக்கள் நினைத்தால் மாற்றம் வரும். புரட்சி மலரும்.
நீங்கள் ஒவ்வொருவரும் பிரச்சார பீரங்கிகளாக மாறி அந்த நல்ல மாற்றத்தை உருவாக்கிட வேண்டும். அந்த சக்தி உங்களிடம் இருக்கிறது. நமக்கு பக்க துணையாக ஆண்டவனும், மக்களும் இருக்கிறார்கள். மாற்றம் வந்தே தீரும். அது நம்மால்தான் முடியும் என்றார் விஜயகாந்த்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...