வீடு திரும்பினாள் குழந்தை லட்சுமி

Read Time:1 Minute, 57 Second

பெங்களூரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒட்டி பிறந்த குழந்தை லட்சுமியின் உடல் நிலை நன்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அவள் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பீகார், ஆராரியா மாவட்டத்தை சேர்ந்த சம்புபூனம் ஏழை தம்பதியின் மகள் லட்சுமி (2). குழந்தை லட்சுமி நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் பிறந்தாள். மிகவும் அதிசயமான இந்த ஒட்டி பிறந்த குழந்தையை பிரிக்க பெங்களூருவிலுள்ள “ஸ்பர்ஷ்’ மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் குழந்தை லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கடந்த நவம்பர் 6ம் தேதி, இம்மருத்துவமனையை சேர்ந்த 36 டாக்டர்கள் அடங்கிய குழு தொடர்ந்து 27 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தி, ஒட்டி பிறந்த குழந்தையை வெற்றிகரமாக பிரித்தனர். பின்னர் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண் காணித்து வந்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்பும் பல நாட் கள் மருத்துவமனையில் இருந்து வந்த லட் சுமியின் உடல் நிலை நன்கு தேறியது. இதையடுத்து, நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டாள்’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் இரட்டைக் கொலை: இந்தியர்கள் அதிர்ச்சி
Next post 5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை