காதலித்தால் உடம்புக்கு நல்லது!!
காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம். சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திறடி கதையாக, ‘நார்மல் லெவலுக்கு’ காதலர்களின் உடல் ஆரோக்கியம் திரும்பி விடுமாம். அதற்காக வருடத்திற்கு ஒரு ‘புதுக் காதல்’ என்று போகலாமா என்று ஆய்வாளர்கள் கூறவில்லை! ஆர்க்யுமென்ட்’ ஆரோக்கியத்தைக் கெடுக்கும்! அதேபோல கடுமையாக சண்டை போடுவதும், வாதிடுவதும் கூட உடல் நலத்தைக் கெடுக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கடுமையாக வாதிடும்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சில மணி நேரங்களில் இது சரியாகி விடும். ஆனால் சில வாரங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைத்தால் கூட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.
எனவே யாருடனாவது சண்டை போட்டாலோ அல்லது வாக்குவாதம் செய்தாலோ, கோபமாக பேசினாலோ அந்த சம்பவத்தை அத்தோடு மறந்து விடுவது நமது உடம்புக்கு நல்லது. நினைத்துக் கொண்டே இருந்தால் சிக்கல் நமக்குத்தான்.
பொறாமைப்பட்டாலும் சிக்கல் ..!
அதேபோல பொறாமை உணர்வும் கூட நமது உடம்பைப் பாதிக்குமாம். பொறாமை என்பது பயம், கோபம், பதட்டம் ஆகியவற்றின் கலவை என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேன் பிளம்மிங்.
பொறாமை உணர்வு ஏற்பட்டால் அது ரத்த அழுத்தம், இதயப் பதட்டம், அட்ரீனலின் அளவில் மாறுபாடு, சோர்வு, பதட்டம், பய உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி உடல் நலனைப் பாதிக்கும் என்கிறார் பிளமிங்.
எனவே, காதலிங்க, சண்டை போடாதீங்க, பொறாமைப் படாதீங்க!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...