உணவு சாப்பிட மறுத்த சிறுமி: அடித்துக்கொன்ற காவற்பொறுப்பாளர்…!!
அமெரிக்காவில் உணவு சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை அடித்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் வசித்து வந்த Nikki Brown என்பவரின் மகள் Latrice Walden(3).
மீண்டும் கருவுற்றிருந்த Nikki, தனது இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் தனது மகள் Latrice- ஐ பார்த்துக்கொள்ள Danielle Turner என்ற பெண் காவற்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், காவற்பொறுப்பாளர் சாப்பிடுவதற்காக இச்சிறுமிக்கு உணவு கொடுத்தபோது, அந்த உணவினை சாப்பிட மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பாதுகாப்புபொறுப்பாளர், அடித்ததில், அச்சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து 911 எண்ணுக்கு தொடர்பு கொண்டு, அவரசரப்பிரிவு உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கையில், சிறுமி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார், இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றி பின்னர் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேலும், அச்சிறுமியின் உடலை பரிசோதனை செய்ததில், அவரது உடலில் தீவிரமான காயங்கள் இருந்துள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தாயார் கூறுகையில், இதுபோன்று நடக்கும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, தற்போது எனக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இருப்பினும் எனது மகள் இறந்தது எனக்கு கவலையாக உள்ளது எனக்கூறியுள்ளார்.
தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள காவற்பொறுப்பாளர் பெண்மணி மீது, கொலை மற்றும் குழந்தையை பொறுப்பற்று கவனித்துள்ளார் என்று குற்றசாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், மார்ச் 22 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating