பாடசாலைகளில் அரசியல் பேசுவதை ஆசிரியர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்…!!

Read Time:2 Minute, 38 Second

schoolமனிதனுடைய தலையெழுத்தை நிர்ணயிக்க போவதும் ஒரு சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போவதும் பாடசாலை. எனவே மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்கள் அரசியல் பேசுவதை தவித்து கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பொகவான கிலானி தமிழ் வித்தியாலயத்தின் வெள்ளி விழாவில் புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு பேசியபோதே இதனை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணியின் தலைவர் பா.சிவநேசன், ஹட்டன் வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் ஆர்.எஸ்.ராஜேந்திரன், அயல் பாடசாலைகளில் இருந்து வருகை தந்த அதிபர்கள் ஆகியோர் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் உறையாற்றிய அமைச்சர்,

மலையகத்தில் நல்லாட்சியின் மூலமாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

மலையக மக்கள் என்னை நம்பி வாக்களித்து இருக்கிறார்கள் நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை.

மக்களுக்கான பிரச்சினைகளை கேட்டு அறிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்ப எங்களுடைய வேலைதிட்டங்களை நாம் மேற்கொண்டு வருன்றோம்.

எமது பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சமுகத்தில் நல்லதொரு நிலமைக்கு வரமுடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இன்று மலையக மக்கள் சிந்தித்து வாக்களித்ததன் காரணமாகதான் மலையகத்திலும் சரி நாட்டிலும் சரி ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் மரணம்..!!
Next post ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு விடுதலை…!!