ஆந்திராவில் வினோத சடங்கு: பெண் வேடத்தில் வீடு வீடாக சென்று ஆசி பெறும் மணமகன்..!!

Read Time:1 Minute, 29 Second

f55af607-e135-4609-acb9-712c80e0f5b3_S_secvpfஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ். கொண்டா கிராமத்தில் மீசையுடன் வலம் வந்த ஒரு பெண்ணை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர்.

பட்டுச்சேலை கட்டி, கையில் உள்ள தட்டில் மஞ்சள், குங்குமம் மற்றும் ரவிக்கை துண்டு போன்ற மங்கள பொருட்களை வைத்து வீடு வீடாக சென்று அதனை சுமங்கலி பெண்களுக்கு வழங்கி அவர் ஆசி பெற்றார். இந்த காட்சியை கண்ட பலர் குழப்பம் அடைந்தனர்.

விசாரணையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த குண்டூர் வம்ச மக்களின் திருமண சடங்கு என்பது தெரியவந்தது.

பெண் வேடம் போட்ட அந்த ஆணின் பெயர் மோகனநாயுடு. பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.

இவருக்கும், மடப்பல்லியைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணுக்கும், என்.எஸ்.கொண்டா கிராமத்தில் திருமணம் நடந்தது.

மணமகனின் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்ததும் அவர் பெண் வேடமிட்டு சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் கொடுத்து ஆசிபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்..!!
Next post இளையோர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் 145 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது இந்தியா..!!