வால் நட்சத்திரத்தில் தரை இறங்கிய பீலே விண்கலம் பணி ஓய்வு..!!

Read Time:1 Minute, 57 Second

067e356b-1d1a-4a72-9715-e470bbbd508b_S_secvpf67 பி சுரியோமோவ்–ஜெராசி மென் கே என்ற வால் நட்சத்திரத்தில் ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘பீலே’ என்ற விண்கலத்தை அனுப்பியது. ரொசப்பா என்ற ராக்கெட் மூலம் இது செலுத்தப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்ட 10 ஆண்டுகள் பயணத்துக்கு பிறகு 2014 நவம்பர் 12–ந்தேதி அந்த விண்கலம் 67பி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கியது. அங்கு போட்டோக்கள் எடுத்து ஜெர்மனியில் கலோஞ்நகரில் உள்ள டி.எல்.ஆர். தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது.

சூரிய ஒளி குறைபாடு காரணமாக பீலேயில் உள்ள பேட்டரிகளின் செயல் திறன் குறைந்தது. எனவே அதன் நிலை குறித்து அறிய முடியவில்லை. அதை தொடர்ந்து அது மாயமானதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே 2015–ம் ஆண்டு ஜூன் 13 முதல் ஜூலை 9–ந்தேதிவரை மீண்டும் செயல்பட தொடங்கியது. போதிய சூரிய ஒளி கிடைத்ததால் மீண்டும் செயல்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த விண்கலத்தில் இருந்து மிக குறைந்த அளவிலான சிக்னலே கிடைக்கிறது. அதன் மீது வால் நட்சத்திரத்தின் தூசிகள் படர்ந்து இருப்பதால் சரிவர பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே பீலே விண்கலம் பணி ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘குட்பை டூ பீலே என ஜெர்மனி விண்வெளி மையமான டி.எல்.ஆர். அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!!
Next post நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்..!!