குடிசை வீட்டுக்குள் புகுந்து மனைவியின் கள்ள தொடர்பை கண்டு பிடித்த கணவன்: கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
சேலம் செவ்வாய்ப்பேட்டை நரசிம்மன் ரோடு, மாரியா பிள்ளை காடு பகுதிகளை சேர்ந்த முருகேசன் (வயது 31). கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் 1999-ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முருகேசன் சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் 4-10-2000 அன்று மனைவியிடம் இருந்து விவாகரத்து கேடடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்த போது பெரியவர்கள் சமாதானம் செய்து கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைத் தனர். அதன் பிறகு 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது முருகேசன் தொடர்ந்து வழக்கு நடத்தாத தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மீண்டும் 2005-ம் ஆண்டு சுமதி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து மறுபடியும் விவகாரத்து கேட்டு 2006-ல் முருகேசன் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த 5-11-2007 அன்று சுமதி சேலம் முள்ளுவாடி கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு தம்மம்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது அவரது கணவர் முருகேசன் மனைவியை பின் தொடர்ந்து அதே பஸ்சில் ஏறி உள்ளார். பஸ்சின் உள்ளே சுமதியுடன் மில்லில் மேஸ்திரியாக வேலை செய்த பெரியசாமி இருந்தார். உடனே அவர் அருகில் சுமதி போய் உட்கார்ந்தார்.
பின்னர் வாழப்பாடி பஸ் நிலையம் வந்த உடன் சுமதியும் பெரியசாமியும் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி ஆத்தூர் மெயின் ரோடு வழியாக சென்றனர். இதை கவனித்த முருகேசன் பஸ்சில் இருந்து இறங்கி அவர்கள் சென்ற ஆட்டோ திரும்பி வரும் வரை காத்து இருந்தார். பிறகு ஆட்டோ டிரைவரிடம் விவரம் கேட்டு அறிந்தார். பிறகு அதே ஆட்டோவில் ஏறி சுமதியும் பெரியசாமியும் தங்கிய வைத்திய கவுண்டர் புத்தூர் உள்ள கூரை வீட்டுக்கு சென்றனர். அங்கு சுமதியும் பெரியசாமியும் இருப்பதை அறிந்தார்.
பின்னர் முருகேசன் ஏத்தாபூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வைத்திய கவுண்டன்புதூர் சென்றனர். அங்கு சுமதி தங்கிய வீட்டின் கதவை தட்டினர். சுமார் 15 நிமிடம் கழித்து சுமதியும் பெரியசாமியும் அறைகுறை ஆடைகளுடன் வெளியே வந்தனர். ஏத்தாப் பூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தார்.
அங்கு முருகேசன் தனது மனைவி சுமதிக்கும் பெரிசாமிக் கும் கள்ள தொடர்பு இருக் கிறது. அவர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் செய்தார்.
ஆனால் போலீசார் அவர் கள் மீது நடவடிக்கை எடுக் காமல் எழுதி வாங்கிக் கொண்டு விட்டதாக தெரி கிறது. இதை தொடர்ந்து முருகேசன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அதில் ஏற்கனவே நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு சுமதிக்கும் பெரியசாமிக்கும் கள்ள தொடர்பை ஏத்தாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வ ராஜ் மற்றும் போலீசார் நேரில் பார்த்தும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விட்டதாக கூறி இருந்தார். இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுமதி மற்றும் கள்ள காதலன் பெரியசாமி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் உத்தராபதி வழக்கு பதிவு செய்துள்ளார்.