8 வயதில் இருந்து நரக வேதனை: தாயின் 2-வது கணவர் செக்ஸ் தொல்லை; சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்

Read Time:5 Minute, 30 Second

சென்னை அரும்பாக்கம் ரஜனி பிளாசா அபார்ட்மென்டில் வசித்து வருபவர் மெகஜெபின் (வயது 52). இவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தங்கீரா (வயது 27). ஆரிபா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். மெகஜெபினின் கணவர் சையத் ரகமஜீன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்கள் 2 பேரும் திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்கின்றனர். தங்கீரா கோவை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த இவர் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- எனக்கு 7 வயதாக இருக்கும் போதே தந்தையை இழந்து விட்டேன். எனது தாய் டாக்டராக வேலை பார்த்து வந்ததால் அவருக்கு நிறைய பேருடன் நட்பு இருந்தது. இதில் எங்கள் வீட்டு காரை பழுது பார்ப்பதற்காக வந்த மெக்கானிக் ரவி செல்வம் என்பவருடன் நெருங்கி பழகினார். அது கள்ள காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டிலேயே இருவரும் உல்லாசமாக பொழுதை கழித்தனர். இதனால் அவரின் மூலமாக எனது தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து ரவிசெல்வத்தை ஊருக்காக 2-வது கணவராக வைத்துக் கொண்டார். அப்போது முதலே ரவிசெல்வம் எனது தாயிடம் கிடைக்கும் சுகத்திற்காக சிறுமியான என்னையும், பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். அவரது தொல்லைகள் அதிகரித்து கொண்டே போனது. எனது தாய் அதைபற்றி கவலைப்படவில்லை. 8 வயதில் இருந்து நரக வேதனை அனுபவித்து வருகிறேன். நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். எனது தங்கை ஆரிபாவுக்கும், ரவிசெல்வம் நிறைய தொந்தரவு கொடுத்தார். எப்படியோ அவரது காம பிடியில் இருந்து தப்பி பிழைத்து வந்தோம். என்னை பிலிப்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அவருக்கு ரவிசெல்வம் பற்றிய விவரம் தெரிந்ததும் என்னை விட்டு பிரிந்து விட்டார்.

அதே போல ஆரிபாவை அவரது கணவர் விட்டு சென்று விட்டார். எங்கள் வாழ்வை சீரழித்த ரவி செல்வத்தை எனது தாய் அதே வீட்டில் தங்க வைத்துள்ளார். நான் கோவை சட்டக்கல்லூரியில் படித்து வருகிறேன். விடுமுறைக்காக வந்தேன்.

எனது படுக்கை அறைக்கு வந்த ரவிசெல்வம் என்னை கட்டி பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் கூச்சலிட்டேன். சத்தம் போட்டேன். எனது தாய் அவரை கண்டிக்கவில்லை. மாறாக என்னிடம் “உனக்கு தான் கணவர் இல்லையே அட்ஜஸ் செய்து போகவேண்டியதுதானே” என்றார்.

இங்கு இருந்தால் நம்மை ஏதாவது செய்து விடுவார்கள் என பயந்து போலீஸ் நிலையம் வந்தேன். ரவிசெல்வம் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. தங்கீராவுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து தங்கீரா தனக்கு சேர்ந்த செக்ஸ் கொடுமையை முறையாக விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது பற்றி அரும்பாக்கம் போலீஸ் அதிகாரி கூறும்போது, சட்டக்கல்லூரி மாணவி தங்கீராவும், அவரது விவகாரத்து வழக்கை கவனித்து வந்த வக்கீலும் காதலித்து வருவதாகவும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்புங்கள் எனவும் டாக்டர் மெகஜெயின் போலீசில் கூறினார். போலீசாரும் அவர்களை விசாரணைக்கு அழைத்தார்கள். அவர்கள் வரவில்லை.

இதற்கிடையே டாக்டர் மெகஜெயின், தங்கீராவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி உள்ளார். அப்போது ரவிசெல்வம் உடனிருந்து சத்தம் போட்டுள்ளார். இதனால் தங்கீரா புகார் கொடுத்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். சம்பவம் உண்மை என்றால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வடிவேலுவுடன் நடனம் ஆடியது ஏன்?- ஸ்ரேயா
Next post பழைய கவர்ச்சி படங்கள் இந்தியில் டப்பிங்: ஷில்பா ஷெட்டி வருத்தம்