பிரிட்டனில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழில்களில் 81 சதவீதமானவை வெளிநாட்டவரின் கரங்களில்

Read Time:2 Minute, 40 Second

london.gifபிரிட்டனில் கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய வேலைகளில் 81 சதவீதமானவை வெளிநாட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இத்தரவுகள் வெளியிடப்பட்டிருப்பதுடன் இது பிரிட்டிஷ் மக்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. பிரிட்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் அரசியல் காரணங்களுக்காகவும் அகதிகளாகவும் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுதவிர உயர்கல்வி மற்றும் திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றும் அதிகளவான வெளிநாட்டவர் இங்கு குடியேறியுள்ளனர். இந்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பல இலட்சம் வேலைகளில் 81 சத வீதத்தை வெளிநாட்டவர்கள் கைப்பற்றியுள்ளனர். இவ்வீதம் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொழில்களை உள்ளடக்கியுள்ளதாகவும் 19 சதவீத வேலைகளை மட்டுமே உள்நாட்டினர் மேற்கொள்வதாகவும் இவ்வாய்வு தெரிவித்துள்ளது. இத்தகவல் இந்நாட்டு மக்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தகவல்களையடுத்து ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்ங் கட்சி வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து தொழில்களை உருவாக்கி கொடுத்திருப்பதாக ஆளுங்கட்சியை குற்றஞ் சாட்டியுள்ளது. ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சரொருவர் குடியேற்ற விடயம் தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார். லண்டன் நகர வீதிகளில் ஆங்கிலம் பேசுவதைக் கேட்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ள இவர் இனிமேலாவது அரசாங்கம் விழித்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
Next post ஈராக்கில் 3 கார்க்குண்டு தாக்குதலில் 26 பேர் பலி