திடீர் கோடீஸ்வரர்களால் துப்பாக்கி விற்பனை அமோகம்

Read Time:2 Minute, 42 Second

autocolt.gifடெல்லி புறநகரான குர்கானில் ரியல் எஸ்டேட் விலை கிடுகிடுவென பலமடங்கு அதிகரிப்பதால் திடீர் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருகின்றனர். பாதுகாப்பு காரணத்துக்காக அவர்களில் துப்பாக்கி வாங்குவோரும் அதிகரித்துள்ளனர். டெல்லியை ஒட்டிய அரியானா எல்லைப் பகுதி நகரம் குர்கான். அபார வளர்ச்சியால் டெல்லி வேகமாக விரிவடைகிறது. எனவே, குர்கான், உ.பி. எல்லை நகரான நொய்டா ஆகியவை அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. அங்கு வீடு, மனை விலை குறுகிய காலத்தில் 2 முதல் 5 மடங்கு வரை விலை உயர்கிறது. எனவே, ஒரு சில கிரண்டு வைத்திருப்பவர்களே திடீர் கோடீஸ்வரர்களாகி விட்டனர். ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவர்கள் நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணக்காரர்களாகி விட்டனர். நல்ல விலை கிடைக்கும்போது வீடு, மனையை விற்று காசுப் பார்த்து வருகின்றனர். அதற்காக, நில உரிமையாளர்களில் பெரும்பாலோர் இப்போது ரியல் எஸ்டேட் தரகர்களாக மாறி வருகின்றனர். தங்கள் வீடு, மனை மட்டுமின்றி, நண்பர்கள், உறவினர்களின் சொத்து விற்பனையிலும் ஈடுபட்டு காசு பார்க்கின்றனர். இப்படி குர்கான்வாசிகள் பலர் திடீர் கோடீஸ்வரர்கள் ஆகி வருவதால், பாதுகாப்பு கருதி அவர்களில் பலர் துப்பாக்கி வாங்குகின்றனர். நிலமற்ற தரகர்களும் அதிக தொகை வர்த்தகத்தை கையாள்வதால் துப்பாக்கி வாங்குகின்றனர். அதன்மூலம், டெல்லி, புறநகர் பகுதிகளில் துப்பாக்கி உரிமம் பெறுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டில் வெறும் 60 பேர் மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு இதுவரை 300 ஆக உயர்ந்துள்ளது. விலை மதிப்புள்ள மனை, வீடு வர்த்தகத்தில் இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அசோக் பரத்வாஜ் என்ற தரகர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளம்: கள்ளக்காதல் ஜோடி கொலையா?- பள்ளிப்பாளையம் அருகே பரபரப்பு
Next post நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி 2 பேர் பலி