மியான்மரில் ஆட்சி மாற்றத்துக்கு முன் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அரசு…!!

Read Time:1 Minute, 30 Second

327666e3-2b35-4343-ae35-b9e230832157_S_secvpfமியான்மரில் சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சுதந்திரமான பாராளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று புதிய அரசு அமைக்க உள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் இந்த மாதம் முடிவு அடைகிறது. பிப்ரவரி மாதம் புதிய எம்.பி.க்கள், நாட்டின் அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். புதிய அதிபர், மார்ச் மாதம் புதிய அரசை அமைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அரசியல் கைதிகளை விடுவிக்கும்படி அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போதைய அதிபரான தெரின் செயின் தலைமையிலான நிர்வாகம் இன்று 15 அரசியல் கைதிகளை விடுவித்தது. இதனைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்படலாம் என அதிபரின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அரசியல் கைதிகளுக்கு உதவி செய்யும் சங்கமும் இத்தகவலை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க மாணவரை கைது செய்த வடகொரியா…!!
Next post புற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அர்னால்ட் ஸ்க்வார்ஸனேகர்…!!