அதிரவைக்கும் கிட்னி மோசடி…. வெளிவரும் உண்மைகள்…!!

Read Time:4 Minute, 34 Second

12552524_996292663776424_7688507056872685582_nஇந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­படும் அப்­பா­விகள் பலரின் சிறு நீரகங்­களை பெற்று சட்ட விரோ­த­மான முறையில் இலங்­கையின் நான்கு தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் 6 வைத்­தி­யர்களினால் முன்­னெ­டுக்கப்பட்ட­தாக கூறப்­படும் சிறு நீரக மாற்று சத்­தி­ர­சி­கிச்சைத் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விஷேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.

இந்­தி­யாவின் அஹ­மதா பாத் பிராந்­திய பொலிஸார் தமது விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளுக்கு அமை­வாக இந்­திய பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­ கொண்ட அறிக்­கைக்குயின் படி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ளதாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்­தி­ய­ரான 35 வய­து­டைய நபரே சிறு நீரக வழங்­கு­நர்­க­ளையும் அதனை பெறு­ப­வர்­க­ளையும் இலங்­கைக்கு அனுப்­பு­வ­தா­கவும் அவர் இவ்­வாறு 60 சிறு நீரக வழங்­கு­நர்­களை இலங்­கைக்கு அனுப்­பி­யுள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் சிறு நீர­கங்­களை வழங்கும் நபர் ஒரு­வ­ருக்கு 5 இலட்சம் ரூபா மட்­டுமே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒரு சிறு நீரகம் இந்­திய ரூபா பெறு­ம­தியின் பிர­காரம் 30 இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டி­ருப்­ப­த­கவும் தெரி­ய­வந்­துள்ளது.

எவ்­வா­றா­யினும் இந் நாட்டில் உள்­ள­தாக கரு­தப்­படும் இந்த சிறு நீரக மாபி­யாவின் பிர­தா­ன சந்­தேக நப­ரான மருத்­துவர் இந்­திய பிரதி நிதிக்கு இந்­திய பெறு­ம­தியின் பிர­காரம் 445 இலட்சம் ரூபாவை வழங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

அஹ­ம­தாபாத் பிராந்­திய பொலிஸார் செய்­துள்ள விசா­ர­ணையின் அறிக்­கை­யினை தற்­போது ஆய்வு செய்து வரும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தி­யட்சகர் சுதத் நகஹ முல்ல ஆகியோர் மேல­திக விசா­ர­ணைகள் தொடர்பில் விஷேட குழு­வொன்றை நிய­மித்­துள்­ளதாக அறி­ய­மு­டி­கின்­றது.

கொழும்பில் உள்ள பிர­ப­ல­மான நான்கு தனியார் வைத்­தி­ய­சா­லைகள் ஊடா­கவே இந்த சட்ட விரோத சிறு நீரக வர்த்­தகம் இடம்­பெற்று வந்­துள்­ள­துடன் அது தொடர்பில் ஆறுவைத்­தி­யர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளனர். இது வரை சுமார் 60 சட்ட விரோத சிறு நீரக மாற்று சத்­திர சிகிச்­சைகள் இடம்­பெற்­றுள்­ளா­தாக கூறப்­படும் நிலையில் இவை அனைத்தும் இந்­தி­யர்­க­ளுக்கே செய்­யப்­பட்­டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த இந்­தி­யர்கள் அனை­வரும் அஹ­ம­தபாத் பொலி­ஸாரால் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளனர்.
இந் நிலையில் மிக சூட்­சு­ம­மாக இடம்­பெற்று வந்த இந்த சட்ட விரோத சிறு நீரக மாற்று சிகிச்சை வர்த்தகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் படி நாட்டில் உள்ள அனைத்து தனியார் வைத்தியசாலைகளிலும் வெளி நாடவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை…!!
Next post இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்..!!