ராஜபாளையத்தில் பெண்களை குறிவைத்து நகை பறித்த 2 பேர் சிக்கினர்; ரூ.2 லட்சம் நகை மீட்பு

Read Time:3 Minute, 37 Second

ராஜபாளையத்தில் பெண் களை குறிவைத்து நகை களை பறித்த 2 பேரை போலீ சார் கைது செய்தனர். இவர் களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பு நகைகள் மீட்கப்பட் டன. பெண்கள் ராஜபாளையம் பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறு வதாக மாவட்ட போலீஸ் சூப்பிண்டுக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் ராஜபா ளையம் துணை போலீஸ் சூப் பிரண்டு முருகேசன் தலை மையில் தளவாய்புரம் இன்ஸ் பெக்டர் இளங்கோவன், ராஜ பாளையம் வடக்கு போலீஸ் நிலைய குற் றப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ராமராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இளந்திரைகொண் டான் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம் பேத் கார் சிலை அருகே 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முர ணாக பதில் அளித்தனர்.

தீவிர விசாரணை

இதனால் போலீசாருக்கு சந் தேகம் அதிகரித்தது. அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்கள் இளந்திரைகொண்டானை சேர்ந்த ஜெயபால் (வயது 43), வத்திராயிருப்பு அருகே உள்ள கிருஷ்ணன் பேட்டையை சேர்ந்த மோஸ்தாஸ் (35) எனவும், இரு வரும் நகை பறிப்பு சம்ப வங்க ளில் ஈடுபட்டதும் தெரிய வந் தது.

இவர்கள் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த கிரேசி என்பவரிடம் 11 பவுன் நகை, இளந்திரைகொண்டானை சேர்ந்த ஆசிரியை சுப்பு லட்சுமி யிடம் 11பவுன், கன்னித் தேவன் பட்டியை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரிடம் 101/2 பவுன் நகைகளை பறித்து சென்று உள் ளனர்.

மேலும் இவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி என்பவ ருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவனை போலீ சார் தேடி வருகின்றனர்.

கைது

இதைதொடர்ந்து ஜெயபால், மோஸ்தாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டு இருந்த 41 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் வழிப்பறி சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக் கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை உறவினர் கைது
Next post இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகில் வந்த 2 அகதிகள் மாயம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்