சாவேசுக்கு எதிராக முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Read Time:1 Minute, 53 Second

வெனிசுலா அதிபர் ஹுயூகோ சாவேசுக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக ஹுயூகோ சாவேஸ் பதவி வகித்து வருகிறார் வெனிசுலாவை சோசலிச பாதையில் அழைத்து செல்லும் அவர், பரவலான வரவேற்பை பெற்றிருந்தாலும், கடும் எதிர்ப்புக்கும் ஆளாகி இருக்கிறார். அண்மையில் வெனிசுலா, அரசியல் சாசனத்தில் திருத்தங்களை கொண்டுவர அனுமதி கோரி நடத்திய வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில் சாவேசின் முன்னாள் மனைவி ரோட்ரியஸ் அவருக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற ரோட்ரியஸ் இந்த போராட்டம் சாவேஸ் என்னும் தனிமனிதனுக்கு எதிரானதல்ல என்றும், சர்வாதிகாரத்தை நோக்கி நாடு செல்லக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் போராட்டம் என்றும் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது இவர் சாவேசுக்கு எதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதிபர் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டாக குறைக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று இவர் வாதிட்டு வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மது விற்ற வாலிபர் கைது
Next post தங்கர்பச்சான் வீட்டு முன் அழுத பெரியவர்!