பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா “மன்மத இளைஞன்” சனுஷன்..!! (அதிரடி”யின் படங்கள் & வீடியோ)
பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா “மன்மத இளைஞன்” சனுஷன்..!! (அதிரடி”யின் படங்கள் & வீடியோ)
வவுனியா திருநாவட்குளத்தை சேர்ந்த சனுசன் பிரேம்குமார் என்பவர் தற்பொழுது ஐரோப்பிய நாடான பின்லாந்து நாட்டில் பெற்றோருடன் வசித்து வருகின்றார்.
இவர் முகநூல் வழியாகவும், நேரிலும் பல பெண்களை காதலிப்பதாக பழகி ஒரு சில மாதங்களுக்கு பின்னர் அவர்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறி பெண்களை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து ஆபாசப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் புதிதுபுதிதாக பெண்களை பிடித்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பாலியல் லஞ்சம் பெற்று வருகின்றாரென சம்பந்தப்பட்ட இளம்பெண்கள், அப்பெண்களின் பெற்றோர்கள் எமது இணையத்துக்கு பல புகைப்பட, வீடியோ, ஆடியோ ஆதரங்களுடன் புகார் செய்து உள்ளனர்.
ஏமாற்றப்பட்ட பெண்கள் நியாயம் கேட்க போனால், முன்னரே தான் எடுத்து வைத்து இருந்த புகைப்படங்ககளை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டுகின்றார். மேற்படி “மன்மதன்” பிரேம்குமார் சனுஷனின் தந்தை பெயர் எஸ். பிரேம்குமார், தாயின் பெயர் பிரேம்குமார் பவளராணி, அண்ணாவின் பெயர் பிரேம்குமார் சபேஷன். இவர்கள் அனைவரும் தற்போது ஐரோப்பிய நாடான பின்லாந்து நாட்டில் வசித்து வருகின்ற போதிலும், இவர்கள் வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்சனைகளை தட்டிக் கேட்க வேண்டிய இவரின் அண்ணாவான சபேஷன் பிரேம்குமார் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி (தொலைபேசியில் மிரட்டி) பேசுகின்றார். “உங்களை போல முட்டாள் பெண்கள் இருக்கும் போது, நாங்கள் ஒன்றுமே செய்ய முடியாது” என்று நக்கலாக பதில் சொல்லுகின்றார்.
இவரின் பெற்றோர் இவருக்கு ஆதரவாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதில் என்ன கேவலமான விடயம் என்றால், இவரின் காமலீலைகளுக்கு இவரின் பெற்றோர் உடந்தை.
இவரிடம் அகப்பட்டு மீளமுடியாமல் தவிக்கும் பெண்களின் பெயர் விபரங்கள் அனைத்தும் எம்மிடம் ஆதாரமாக இருகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்திற் கொண்டு வெளியிடவில்லை.
மேற்படி நபரின் லீலைகள் தொடரும் பட்சத்தில் எம்மிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவோம்.
**இதேபோல் சில மாதங்களுக்கு முன்னர், வவுனியாவில் உள்ள பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி, “ஸ்கைப்” மூலம் இவனுடன் கதைத்த அப்பெண்ணின் மனதை மயக்கி அரைகுறை ஆடைகள் உட்பட விதம்விதமாக (“ஸ்கைப்” மூலம்) எடுத்த புகைப்படங்களை போலிமுகநூல் மூலம் தரவேற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து அப்போதே எமது இணையத்தில் மேற்படி சனுஷன் என்பவனின் புகைப்படத்துடன் நாம் செய்தி பிரசுரித்து இருந்தோம்.
அப்போது நாம் செய்தியை பிரசுரித்தவுடன், சனுஷனின் தமையன் எம்முடன் தொடர்பு கொண்டு “எனது தம்பி செய்தது பிழை, இனிமேல் இப்படி நடக்காமல் நாம் பார்த்துக் கொள்கிறோம், தயவுசெய்து எமக்காக செய்தியை நீக்கி விடுங்கள்” என்றார்.
அதேபோல் சனுஷனும் “இனிமேல் நான் இப்படி யாருடனும் நடக்க மாட்டேன்” என தனது பெற்றோர் மீது ஆணையாக தெரிவித்த காரணத்தினால், நாம் அவரது குடும்பத்தை கருத்தில் கொண்டு அந்த செய்தியை நீக்கி இருந்தோம்.
ஆயினும் இவர் இப்போதும் திருந்தாமல், தொடர்ச்சியாக இளம்பெண்களை ஏமாற்றி வருவது குறித்து எமக்கு சம்பந்தப்பட்ட பெண்களே ஆதரங்களுடன் தெரிவித்து உள்ளதுடன், மேற்படி சனுஷனின் “மன்மத விளையாட்டுக்கு” அவனது பெற்றோரும் வக்காலத்து வாங்கி துணை போவதுடன், அவனது அண்ணரும் “அவனைப் புரிந்து கொண்டு, நீங்கள் தான் திருந்த வேண்டுமென” தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்தே மேற்படி இளம்பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி செய்தியை நாம் பிரசுரித்து உள்ளோம்.
(எம்மிடம் மேற்படி பெண்களின் நேரடியாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோக்கள், உட்பட பல ஆதாரங்கள் உள்ள போதிலும், இப்பெண்களினதும், இப்பெண்களின் குடும்பத்தவர்களினதும் எதிர்கால நன்மை கருதி அவற்றை நாம் பிரசுரிக்கவில்லை. தேவை ஏற்படின் அவை சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும்)
Thanks… WWW.ATHIRADY.COM
Average Rating