மதுரையில் வாலிபர் கடத்தி கொலை
மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின் நண்பர்களான காந்தி, கண்ணன் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிமுத்து வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்குப் பதிவு காளிமுத்து காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கமுதியை அடுத்த கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காளிமுத்துவை முன் விரோதம் காரணமாக கோவிந்தராஜ், ஈஸ்வரன், பூமி, குரு, வழிவிட்டான் சிவசுப்பிரமணியன், வீரபத்திரன், பல்லு ஈஸ்வரன் ஆகியோர் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். காணாமல் போன வாலிபரை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...