அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!

Read Time:2 Minute, 11 Second

4eaa6b7b-bb2a-46f1-a509-e8e78ee50fa2_S_secvpfஅமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம், அமெரிக்காவின் புலனாய்வு துறை விசாரணை நடத்தியது. அவர்களுடைய ஆவணங்களை பரிசோதனை செய்து உள்ளது. அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்றும் டேட்டா தரவுகளை கொண்டு ஆய்வு செய்து உள்ளது. அதன்பின்னர் 6 பேரும் அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், 5 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என 6 பேரும் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டதாகவும், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த 2-ம் தேதி தீவிரவாத தம்பதியினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர் 6 பேரும் அரிசோனாவின் சோனாய்டா நகர் அருகே கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுடன் 2 கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!
Next post ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!