வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

Read Time:5 Minute, 9 Second

பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்; ஏன் தெரியுமா? அங்கு ஏராளமாக இருக்கும் வாட்டசாட்டமான ஆப்ரிக்க இளைஞர்களை, “அனுபவிக்க’ தான். இந்த இரு பெண்களும் ஒரு மாதம் கென்யாவின் கடற்கரையில் தங்குவதற்கு திட்டமிட்டு வந்துள்ளனர். இங்கு ஆறடி நான்கு அங்குல உயரம் கொண்ட வாட்டசாட்டமான மாசாய் இனத்தைச் சேர்ந்த 23 வயது மற்றும் 20 வயது இளம் வாலிபரை வாடகைக்கு பிடித்துள்ளனர். தோழிகள் இருவரும் அந்த வாலிபருடன் கைகோர்த்தபடி, பீச்களில் உலவுகின்றனர். பிக்னி பிராவும், ஜீன்ஸ் பேன்ட்டும் தான் அந்த பெண்களின் உடை. கடற்கரையை ஒட்டி பல கிளப்கள் இருக்கின்றன. இந்த கிளப்களில் ஏராளமான, “வாடகை’ வாலிபர்கள் கிடைக் கின்றனர். இவற்றில் ஒரு கிளப்பில், வாலிபர்கள் விளையாட்டு அரங்கில் அந்த பெண்கள் பரிசளித்த ஆடம்பர கண்கண்ணாடி, விலை உயர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷூவுடன், இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு விளையாடுகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் வாலிபர்கள் மீது ஒரு கண்ணோடு, பிரத்யேகமாக வினியோகிக்கப்படும் வோட்கா, தேன், எலுமிச்சை கலந்த, “டவா’ என்ற மதுவகையை அருந்துகின்றனர். விளையாடுவதற்கு பணம் தீர்ந்ததும், பெண்கள் அமர்ந்திருக்கும் டேபிளில் வந்து, அவர்களை முத்தமிட்டு, மேலும் சில நாணயங்களை வாங்கிச் சென்று விளை யாட்டை தொடர்கின்றனர்.

அந்த இடத்தில் இவர்களைப் போலவே ஏராளமான வாடகை வாலிபர்கள் இருக் கின்றனர். “இது காதல் அல்ல; இது ஒரு சமுதாய ஏற்பாடு. அவனுக்கு நான் ஒரு சிறப்பான மேல்சட்டை வாங்கிக் கொடுத்தேன். நாங்கள் டின்னர் சென்றோம். என்னுடன் தங்கியிருக்கும் வரை அவன் எதற்காகவும் செலவழிக்க வேண்டியது இல்லை. எனது விருப்பம் எல்லாம் அவனால் நிறைவேறுகிறது. எனக்கு நேரம் சிறப்பாக கழிய வேண்டும். எத்தனை யோ ஆண்கள், டின்னர் செல்வ தற்காக பெண்களை வாடகைக்கு எடுத்துச் செல்வதில்லையா?’ என்று தனது செயலை நியாயப்படுத்துகிறார் அந்த 64 வயது பிரிட்டன் பெண்.

இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போல ஏராளமான பெண்கள் இதற்காகவே மொம்பாசா வருகின்றனர். தனியாக வரும் ஐந்து பெண்களில் ஒருவர், இதற்காகவே இங்கு வருகின்றனர்.அங்குள்ள 22 வயது வாலிபர், பார்ப்பதற்கு ஒலிம்பிக் கூடைப்பந்து வீரரைப் போல இருக்கிறார். அவரிடம் விசாரித்த போது, இதுவரை 100க்கு மேற்பட்ட வெள்ளைக்கார பெண்களுடன் இரவை கழித்ததாக கூறுகிறார். இவர்களில் பெரும்பாலானோர் இவரை விட 30 வயதுக்கு அதிகமானோர் தான்.

கிளப்புக்கு வந்ததும், பெண் வாடிக்கையாளர்கள் கிடைத்து விடுகின்றனர். “மிக பணக்கார நாடுகளில் இருந்து வரும் பணக்கார பெண்கள், ஆடம்பர ஓட்டலில் தங்குகின்றனர். அவர்கள் எனது இளமையையும், நான் அளிக்கும் இன்பத்தையும் ரசிக்கின்றனர்; எனக்கு பணம் கிடைக்கிறது’ என்கிறார் அந்த வாலிபர். இந்த கிளப்களில், நடனமாடுவதற்கும் ஆண்கள் உள்ளனர். இவர் களை சுற்றிலும் வெள்ளைக்கார பெண்கள் தான் வேடிக்கை பார்க்க கூடுகின்றனர்.

இந்த “செக்ஸ்’ சுற்றுலாவால் எய்ட்ஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான பெண்கள் காண்டம்கள் பயன்படுத்த விரும்புவதில்லை. மிக இளம் வயது ஆண்களை தேர்வு செய்வதால், எய்ட்ஸ் அபாயம் இருப்பதில்லை என்று அவர்கள் கருதுவதே இதற்கு காரணம். சுற்றுலாத் துறை அதிகாரிகளும் கெடுபிடி காட்டுவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு
Next post 1993 இல் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் சனிக்கிழமை தோண்டியெடுப்பு