விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது…!!
தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பஸ் மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீட் டென்னோலொஜிஸ் எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் இத்தொழில்நுட்பத்தின்படி, விமானத்தின் கூரை மீது கூண்டொன்று அமைக்கப்டும். இந்த கூண்டை சுற்றி பாதுகாப்பான மற்றும் உறுதியான கண்ணாடி சுவர்கள் எழுப்பப்படும்.
இந்த கூண்டிற்கு செல்வதற்கு விமானத்திற்குள்ளே இருந்து தானியங்கி படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதியும் உள்ளன.
விமானத்திற்குள் உள்ள ஒரு சிறப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு இருக்கைகளில் அமர்ந்துகொண்டால், அந்த இருக்கைகள் மேலே தூக்கி செல்லப்பட்டு கூரை மீதுள்ள கண்ணாடி கூண்டிற்குள் நிலை நிறுத்தப்படும்.
பின்னர், எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், சோர்வு ஏற்படாமல் சுமார் 360 பாகை சுற்றளவு வரை சுற்றி பார்த்துக்கொண்டு பயணம் செய்யலாம்.
இதுபோன்ற வசதியினை எந்தவிதமான நவீன விமானத்திலும் பொருத்த லாம் என வின்ட்ஸ்பீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியினை விமானத்தில் பொருத்துவதற்கு 8 முதல் 25 மில்லியன் டொலர் (சுமார் 112 கோடி முதல் 350 கோடி ரூபா) வரை செலவாகும்.
“தொலை தூர விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சோர்வு ஏற்படாமல் இருக்கவே இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த நவீன வசதியை தற்போது காப்புரிமை மட்டுமே செய்து நிலையில், இது விரைவில் நவீன விமானங்களில் பொருத்தப்பட உள்ளது’ என இது குறித்து வின்ட்ஸ்பீட் டெக்னோலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating