சிவனொலிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் இன்று ஆரம்பம்..!!

Read Time:2 Minute, 46 Second

download (2)சிவனொலிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் இன்று ஆரம்பமாகின்றது.

தற்போது பெருந்திரலான பக்தர்கள் சிவனொலிபாதமலைக்கு வந்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சிவனொலிபாதமலைக்கான பல வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஹட்டன் நல்லதன்னி வீதி பிரசித்தி பெற்று காணப்படுகின்றது.

இன்று ஆரம்பமாகவுள்ள சிவனொபாதமலை பருவ காலம் எதிர்வரும் 5 மாதங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது

இதே வேளை சிவனொபாதமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாத்திரையின் போது தங்களின் பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் தொடர்பில் பக்தர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாத்திரையின் போது காசல் ரீ லக்ஸபான உள்ளிட்ட நீர் நிலையில் நீராடுவதை தவிர்க்குமாறும் ருவன் குணசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே வேளை யாத்திரையின் ​போது ஏற்படக்கூடிய அவசர தேவைகளுக்கான தொலைபேசி இலக்கங்களும் பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 052 20 55 500 , 071 85 91 122 மற்றும் 045 22 32 222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு பொலிஸாரின் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதனிடையே சிவனொலிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொள்வோர் கழிவுப் பொருட்கள் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை தேவையற்ற இடங்களில் இட வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொலித்தீனகளை சுற்று சூழலில் இடும் போது பாரியளவில் சூழல் மாசடைவதாக அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி..!!
Next post கடை திறப்புவிழாவில் ஹன்சிகவிடம் சிலுமிசம் செய்த கிழவன்…!!