புதுவண்ணாரப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிறுமியிடம் சில்மிஷம்: என்ஜினீயர் கைது..!!

Read Time:1 Minute, 32 Second

42180777-4b65-40a9-bc84-cc185a55ce32_S_secvpfபுதுவண்ணாரப்பேட்டை இளைய தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் என்ஜினீயர் மேகதுரை வேலை பார்த்து வந்தார். அவர் அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் குடியிருப்பு ‘லிப்டில்’ 10–வயது சிறுமி தனியாக வந்தார். அப்போது அதே லிப்டில் என்ஜினீயர் மேகதுரையும் ஏறினார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த சிறுமி லிப்டில் இருந்து வெளியே வந்ததும் கூச்சலிட்டு கதறினார்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்த போது என்ஜினீயர் மேகதுரை சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மேகதுரையை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அவரை புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ண பிரபு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்தான்புல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு: பெண் பலி…!!
Next post ஓடும் பஸ்சில் தவறி விழுந்து எல்.ஐ.சி. ஊழியர் பலி…!!