அமெரிக்கா: ஹிலாரி ஒரு லெஸ்பியன்? அமெரிக்காவில் பரபரப்பு

Read Time:2 Minute, 38 Second

ani_kissingcousins6cp.gifஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு அதிகாரப்பூர்வமான பிரசாரம் துவங்குவதற்கு முன்பே, தலைவர்கள் பற்றிய வதந்திகள் அதிகளவில் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று, தனது உதவியாளரும் மிக அழகானவருமான ஹுமா அபெடினுடன் ஹிலாரி லெஸ்பியன் உறவு வைத்திருப்பதாக எழுந் துள்ள வதந்தி. அதிபர் தேர்தலில், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்கு பதில், தாங்கள் விரும்பாத தலைவர்கள் பற்றி வதந்திகள் பரப்புவது, இம்முறை பெரிதும் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தரம்தாழ்ந்து, தலைவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். எப்போதும் ஹிலாரி கிளின்டனுடனே இருப்பவர் ஹுமா அபெடின். சாலையில் போகும் போது கூட, இருவரையும் பிரிக்க முடியாது. இதனால், இவர்கள் இருவருக்கும் லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி கிளப்பப்பட்டுள்ளது. இ-மெயில் துவங்கி சாதாரண கடிதம் மூலம் வரை இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.ஹிலாரி மட்டுமின்றி, அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள மற்ற தலைவர்கள் குறித்தும் வதந்தி பரப்பப்படுகிறது. ரூடி கிலானியின் மனைவி, அப்பாவி நாய்க்குட்டிகள் கொல்லப்படுவதை ஆதரிக்கிறாராம். பரக் ஒபாமா, முஸ்லிம் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறார். பிரெட் தாம்சன், ஊழல் பிளேபாயாக வர்ணிக்கப்படுகிறார். இப்படி ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து ஹிலாரியிடம் கேட்ட போது, `என்னைப் பற்றி, பலர் பலவிதமாக சொல்கின்றனர். எனவே, இதுபற்றி நான் கவலைப்படவோ அல்லது கவனிக்கப் போவதோ இல்லை. இவை எல்லாம் உண்மையில்லை. ஆனாலும், இதுபோன்றவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியாது. யார் என்ன விரும்புகின்றனரோ அதை சொல்லிவிட்டு போகட்டும்’ என்று ஒதுக்கித் தள்ளி விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்த வார ராசிபலன் (30.11.07 முதல் 06.12.07 வரை)
Next post விமானத் தாக்குதல் தொடரும் – பிரதமர்..!