வருகிறது சிவாஜி வெள்ளி விழா
சிவாஜி 175வது நாளை எட்டிக் கொண்டிருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், சிவாஜி படக் குழுவினரும் வெள்ளி விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படம் சிவாஜி. உலகெங்கும் 135 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் 100 நாட்களைத் தாண்டிய முதல் படம் சிவாஜி. தற்போது 175 நாட்களை சிவாஜி தொடவுள்ளது. இப்படத்தின் 100வது நாள் விழாவை ஏவி.எம். நிறுவனம் பெரிய அளவில் கொண்டாடவில்லை. மிகப் பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தின் நூறாவது நாள் விழாவை ஏன் கொண்டாடவில்லை என்று ஏவி.எம். நிறுவனத்திடம் மீடியாக்கள் கேட்டபோது, 175 வது நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கமாக தங்களது படங்களின் வெள்ளி விழாவை பிரமாண்டமாகக் கொண்டாடுவது ஏவி.எம். நிறுவனத்தின் வழக்கம். அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான சிவாஜியின் வெள்ளி விழாவையும் தற்போது பெரிய அளவில் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த வார இறுதியில் சிவாஜி 175 நாட்களைத் தொடுகிறது.
இதையடுத்து சிறப்பான விழா எடுத்து சிவாஜி படக் குழுவினரை கெளரவிக்கவும், பரிசளிக்கவும் ஏவி.எம். திட்டமிட்டுள்ளாம். இந்த விழாவை சிவாஜி படக் குழுவினர் தவிர ரஜினியும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளாராம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...