கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

Read Time:2 Minute, 26 Second

timthumbகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30.12.2015ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று(16.12.2015) புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்;தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30.12.2015ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம்; 25.12.2005 அன்று மட்டக்களப்பு புனித மரியாழ் தேவாலயத்தில் நடைபெற்ற நல்லிரவு ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சந்திரகாந்தனை கடந்த 2.12.2015 புதன்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருந்தினர் அதன் போது 16.12.2015 வரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி என்.எம்.அப்தல்லாஹ் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று (16.12.2015) புதன்கிழமை மீண்டும் நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30.12.2015ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கர வண்டியில் பயணித்த 17 வயது இளைஞன் உயிரிழப்பு…!!
Next post ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது – திட்டமிட்டபடி விமானங்கள் பயணிக்கும்…!!