பிலிப்பைன்ஸை தாக்கிய புயலால் 7,50,000 பேர் வெளியேற்றம்…!!
பிலிப்பைன்ஸில் மெலர் என்ற சூறாவளி தாக்கியதையடுத்து சுமார் 7,50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸின் வடக்கு முனையான சமர் என்ற தீவில் நேற்று அதிகாலை மெலார் புயல் தாக்கியது. மணிக்கு 185 கிலோமீற்றர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இங்குள்ள 1,50,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சுமார் 40 உள்ளூர் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 73 கப்பல்களும் நூற்றுக்கணக்கான மீன் பிடிப் படகுகளும் துறைமுகத்திலேயே தங்கியிருக்கும்படி உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலை மற்றும் சில அலுவலகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
மெலர் என்ற இந்தப் புயல் கரையைத் தாக்கும் போது 13 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
மேலும், அதிக மழை காரணமாக சுமார் சில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
லூஸன் தீவுக்கு தென்கிழக்குப் பகுதியில் உள்ள அல்பே மாகாணத்தில் மட்டும் சுமார் 6,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடும் மழை காரணமாக அருகிலுள்ள மேயோன் எரிமலைக்கு தாழ்வான பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அல்பே மாகாணத்தில் 12 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடருக்கு தயார்படுத்திக் கொள்வதில் அல்பே மாகாண நிர்வாகம் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.
கடந்த ஆண்டு ஹகுபிட் என்ற மிகப்பெரிய சூறாவளி ஏற்பட்ட போது, ஒருவர் கூட இங்கு பலியாகாமல் காப்பாற்றப்பட்டனர், காரணம் முன்கூட்டியே மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அல்பே மாகாணத்துக்கு தெற்கில் உள்ள சர்சோகன் பகுதியிலிருந்து சுமார் 1,30,000 பேர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
2013இல் பிலிப்பைன்ஸை ஹையான் என்ற புயல் தாக்கிய போது சுமார் 7,350 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating