உடலில் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிப்பது எப்படி…?

Read Time:5 Minute, 50 Second

images3-500x500உடலில் பல்வேறு செயல்பாடுகள் ஹார்மோன்களால் தான் நடைபெறுகிறது. ஹார்மோன்கள் தான் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது, தம்பதியருக்குள் அன்யோன்யத்தை சரியாக பராமரிப்பது,

சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்று பலவற்றை செய்கிறது. எனவே உடலில் ஹார்மோன்களின் அளவை சீராக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். இதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக தற்போது பல ஆண்கள் மற்றும் பெண்கள் பாலுறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் உள்ளனர்.

இதற்கு காரணம் மன அழுத்தத்தினால், பாலுணர்ச்சியை அதிகரிக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படுவது தான். எனவே இந்த செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிக்க மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, தூக்கமின்மை, மோசமான டயட், உடல் உழைப்பு இல்லாமை போன்றவற்றை சரிசெய்ய வேண்டும்.

குறிப்பாக செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து அவற்றை உட்கொண்டு வந்தால், செக்ஸ் ஹார்மோன்கள் அதிகரித்து, பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்படலாம்

மஞ்சள் பால்

தினமும் இரவில் படுக்கும் முன் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வர, மனம் அமைதி பெற்று, மன அழுத்தம் குறையும். அதிலும் ஒரு டம்ளர் பாலில், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் குறையும்.

ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள்

ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் உடலினுள் உள்ள காயங்களை குறைத்து, கார்டிசோல் ஹார்மோன்களைக் குறைக்கும். கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தை மட்டும் ஏற்படுத்தாமல், செக்ஸ் ஹார்மோன்களை அழிக்கும். எனவே ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் நிறைந்த மீன்களான சால்மன், சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் வாரம் 2 முறையாவது உட்கொண்டு வாருங்கள். மேலும் சமைக்கும் உணவில் ஆலிவ் ஆயில் சேர்த்து சமையுங்கள்.

நல்ல கொழுப்புக்கள்

உடலுக்கு நல்ல கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல கொழுப்புக்களை எடுக்கிறோமோ, அவ்வளவு கெட்ட கொழுப்புக்களை உடலில் இருந்து வெளியேற்றலாம். கெட்ட கொழுப்புக்கள் உடலில் குறைந்தால், இரத்த ஓட்டம் சீராக இருந்து, ஹார்மோன்களும் சீராக உற்பத்தி செய்யப்படும்.

ஈஸ்ட்ரோஜென் உணவுகள்

பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை அதிகரிக்கும் உணவுகளான ஆலிவ் ஆயில், பட்டாணி, ஆளி விதை, பூண்டு, பீட்ரூட், சூரியகாந்தி விதை போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். இதனால் செக்ஸ் ஹார்மோன் குறைவதைத் தடுக்கலாம்.

தூக்கம்

தினமும் 8 மணிநேர தூக்கம் கிடைத்தால் தான், உடலில் ஹார்மோன்களின் அளவு சமநிலையுடன் இருக்கும். நல்ல தூக்கமானது மன அழுத்தத்தைக் குறைக்கும், பாலுணர்ச்சியை தூண்டும் மற்றும் உடலினுள் உள்ள உறுப்புக்கள் சரிசெய்யப்பட்டு புத்துயிர் பெறச் செய்யும்.

அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள் வேண்டாம்

உங்களுக்கு ஏதேனும் ஓர் உணவுப் பொருள் அலர்ஜியை ஏற்படுத்துமானால், அவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அலர்ஜி உண்டாக்கும் உணவுகளை உட்கொண்டு வர, உடலினுள் கார்டிசோல் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதனால் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.

மருந்து மாத்திரைகள் நீங்கள்

அடிக்கடி கண்ட மாத்திரைகளை எடுத்து வந்தால், அதனால் ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் சுய மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் எடுக்கும் கண்ட மருந்துகளால், உங்கள் பாலியல் வாழ்க்கை தான் பாதிக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி இத்தாலி பயணம்…!!
Next post 8 வயது சிறுமியை சீரழித்தவர் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை..!!