கோவை சிங்காநல்லூரில் கழுத்தை அறுத்து சாமியார் கொலை…!!

Read Time:4 Minute, 22 Second

82040eaf-750a-4367-9d13-57605c1df8fe_S_secvpfகோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் பின்புறம் தனபால் லே–அவுட் உள்ளது. இங்கு மணி என்கிற சாமியார் (வயது 45) தனியாக வசித்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குறி சொல்வார். மேலும் பரிகாரமும் செய்து வந்தார்.

இதற்காக வீட்டில் தனியாக மாரியம்மன் கோவில் அமைத்து இருந்தார். இவரிடம் குறிகேட்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

இன்று குறிகேட்பதற்காக பக்தர்கள் சிலர் சாமியார் மணியின் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் குறி சொல்லும் அறை மட்டும் திறந்து இருந்தது. ஆனால் சாமியார் அங்கு இல்லை. எனவே அவர் வெளியில் சென்றிருக்கலாம் என கருதி பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த பக்தர்கள் சாமியார் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு மணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் நிஷா பார்த்திபன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சாமியார் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். அவரது கழுத்தை அறுத்து மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர். மேலும் தலையிலும், உடலில் சில இடங்களில் கொடூரமாக வெட்டி உள்ளனர்.

இறந்து போன சாமியாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் மோப்ப நாய் ராஜா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று விட்டு வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

சாமியாரை கொன்ற மர்மநபர்கள் அவரது அறை உள்பட வீட்டுக்குள் இருந்த அனைத்து அறைகளையும் பூட்டி சென்று உள்ளனர். வீட்டில் இருந்த டி.வி., பணம் மற்றும் சாமியார் அணிந்திருந்த நகைகளையும் திருடிச் சென்று உள்ளனர்.

எனவே மணியிடம் குறிகேட்க வந்த நபர்கள் யாராவது சாமியார் தனியாக இருப்பதை அறிந்து பணம், நகைகளை அபகரிக்க கொலை செய்திருக்கலாம் அல்லது சொத்து தகராறில் உறவினர்கள் யாராவது அவரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சாமியார் தனது வீட்டுக்கு அருகில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களில் யாராவது சாமியார் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் உள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

சாமியார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினரும், அவரிடம் குறி கேட்க வரும் பக்தர்களும் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புருண்டி நாட்டில் ராணுவம் தளம் மீது தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி…!!
Next post முதல் முறையாக சவுதி அரேபியா தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்..!!