உக்ரைனில் பாராளுமன்றத்தில் அமளி: பிரதமர் மீது தாக்குதல்…!!

Read Time:1 Minute, 51 Second

1e7007df-791c-4ac1-91f0-98ff7d9507f7_S_secvpfரஷியா அருகேயுள்ள உக்ரைன் நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கீவ் நகரில் நடந்தது. அதில் அரசின் ஆண்டறிக்கையை பிரதமர் ஆர்சென் யட்செனிக் (41) தாக்கல் செய்தார். அப்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஓலே பர்னா என்பவர் திடீரென எழுந்து இடை மறித்து கேள்விகள் கேட்டார். அதற்கு பிரதமர் யட்செனிக் பதில் அளித்து கொண்டிருந்தார்.

அதை ஏற்க மறுத்த எம்.பி. பர்னா பிரதமர் யட்செனிக் வைத்து படித்து கொண்டிருந்த அறிக்கையை பறித்து வீசினார். மேலும் பிரதமரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார்.

இதனால் பாராளுமன்றத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அமளி உருவானது. இதற்கிடையே பிரதமர் யட்செனிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் விரைந்து வந்து பிரதமரை தாக்கிய எம்.பி. பர்னாவை கீழே தள்ளி விட்டனர். மற்றும் கையில் கிடைத்தவற்றை தூக்கி அவர் மீது வீசினர். சிறிது நேர அமளிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது.

கடந்த 2014–ம் ஆண்டில் ரஷிய ஆதுரவாளராக இருந்த விக்டர் யுனுகோவிச் தலைமையில் இருந்த அரசு வீழ்ந்தது. அதை தொடர்ந்த பிரதமர் ஆர்செனி யட்செனிக் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இவர் ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் அவார். இவர் பதவி விலக கோரி இப்பிரச்சினை ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டாவது தடவையாக பரிசுத்த பாப்பரசரை சந்திக்கிறார் ஜனாதிபதி…!!
Next post ஆப்கானிஸ்தானில் ஸ்பெயின் தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 4 போலீசார் பலி…!!