தனியாருக்கான சம்பள உயர்வு ஜனவரியில் நடைமுறை..!!

Read Time:1 Minute, 26 Second

news201df50114ffதனியார் ஊழியர்களுக்கு 2,500 ரூபா சம்பள உயர்வுக்கான சட்டவரைவு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனியார் ஊழியர்களுக்கு ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளமாக 10 ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்படுவ துடன், இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தனியார் ஊழியர்களுக்கு 2, 500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற் கான சட்டவரைவு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது கிடைத்ததன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது சீறி பாய்ந்த ரெயில்: வைரல் வீடியோ..!!
Next post மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு..!!