பனிமலை உருகுகிறது: வெப்பமயமாகும் எவரெஸ்ட் சிகரம்…!!

Read Time:1 Minute, 56 Second

a220cd6f-a47e-43db-882e-502111a5b36e_S_secvpfஎவரெஸ்ட் சிகரம் வெப்பமயமாவதால் பனிமலை உருகுகிறது.

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் உள்ளது. பனியால் மூடப்பட்ட இந்த எவரெஸ்ட் சிகரம் 8,844 மீட்டர் உயரம் கொண்டது.

எவரெஸ்ட் சிகரத்தை திபெத், பீடபூமியில் குயோ மோலாக்மா என்றழைக்கின்றனர். இதுகுறித்து ஹுனான் பல்கலைக்கழகத்தின் சீன அறிவியல் அகாடமியும், குயோமோ லாக்மா பனிசிறுத்தை சரணாலய மையமும் இணைந்து ஆய்வு நடத்தினார்கள்.

இதில் பருவநிலை மாற்றம் காரணமாக எவரெஸ்ட் சிகரம் வெப்பமயமாகி வருவது தெரியவந்தது.

இதனால் எவரெஸ்ட் பனிமலை உருகி அதன் அளவு சுருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திபெத்தில் 20–ம் நூற்றாண்டில் 1990–ம் ஆண்டுகளில் வெப்பமயம் தொடங்குகிறது.

அதில் இருந்து திபெத்தில் உள்ள இமயமலையில் பனி உருக தொடங்கியது. அங்குள்ள கரகோர்ணம், வெஸ்டர்ன் குன்லம் மாகாணங்களில் உருகும் தன்மை அதிக அளவில் ஏற்பட்டது.

இதன் காரணமாக திபெத்தில் ஏரிகள் பல மடங்கு பெருகியுள்ளது. 1970–ம் ஆண்டுகளில் அது 1081 ஏரிகள் இருந்தன. பின்னர் 2010–ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது 80 சதவீதம் ஏரிகள் அதிகரித்துள்ளது.

எனவே திபெத்தில் வனப்பகுதி அதிக அளவில் பரவியுள்ளது. கடந்த 1997–ம் ஆண்டில் 72 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேராக இருந்த வனப்பகுதி 2013–ம் ஆண்டில் 226 கோடி ஹெக்டேர் ஆக உயர்ந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனத் தலைநகர் பீஜிங்கில் கடுமையான காற்று மாசு: கார்கள் ஓடத்தடை – மூச்சுத் திணறலால் மக்கள் அவதி…!!
Next post ஈரானில் பரவும் பன்றிக் காய்ச்சலுக்கு 33 பேர் பலி…!!