பறவை போன்று மனிதனை சுமந்து விண்ணில் பறக்கும் எந்திரம்..!!

Read Time:1 Minute, 46 Second

1eae4125-2db7-459c-a5a0-a88bad93eed5_S_secvpfவானில் பறக்கும் பறவைகளை பார்க்கும்போது நமக்கும் சிறகு முளைத்து பறக்க மாட்டோமா? என்ற எண்ணம் உருவாகும். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது.

ஆம்! பறவை போன்று மனிதனுடன் சேர்ந்து பறக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஸ்னோஸ்ட்ராம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் மாணவர்கள் குழு வடிவமைத்துள்ளது.

இந்த எந்திரத்தில் 24 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே அதை பலவிதமாக இயக்க முடியும். விமானத்தில் இருப்பது போன்று ‘புரோபெல்லர்கள்’ தரை இறங்க கூடிய கியர்கள் உள்ளன.

மின்சக்தி உதவியுடன் இயங்கும் விமானம் போன்ற இந்த எந்திரத்தை செங்குத்தாக மேலே கிளப்பி பறக்க வைக்கவும், தரை இறக்கவும் முடியும். இந்த எந்திரத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

இந்த பறக்கும் எந்திரத்தில் 70 கிலோ எடைவரை உள்ளவர் மட்டுமே பறக்க முடியும். சுமார் 5 நிமிடம் மட்டுமே விண்ணில் பறக்கும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகநேரம் பறக்கும் வகையில் இது மேம்படுத்தப்பட உள்ளது. அதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் தீவிபத்து; 2 ஆயிரம் குடிசைகள் சாம்பலானது..!!
Next post நாளை முதல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: பி.பி.சி. எச்சரிக்கை..!!