வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

Read Time:2 Minute, 26 Second

e31327e9-6c9b-46b4-a7b2-8d25739ba555_S_secvpfவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இதன் விளைவாக வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வுநிலையுடன், தென்மேற்கு வங்க கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வேதாரண்யம் வரையில் வடகடலோர மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழையும் பெய்யும். தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.

சென்னையைப் பொருத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் தீவிரவாதிகள் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டுவீச்சு…!!
Next post கோவையில் ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: இளம்பெண் கைது…!!