ஆறு நிமிடத்துக்கு ஒரு “டைவர்ஸ்’ * இங்கல்ல, எகிப்தில்…!

Read Time:1 Minute, 38 Second

ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து நடக்கிறது; திருமணம் ஆன முதலாண்டில், மூன்றில் ஒரு திருமணம் முறிகிறது. எகிப்து புள்ளிவிவர துறை, இப்படி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்பதாவது: எகிப்து நாட்டில், ஒரு நாளைக்கு 240 விவாகரத்துக்கள் நடக்கின்றன. பெண்களை விட, ஆண்கள் தான் அதிக அளவில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர். விவாகரத்தை பொறுத்தவரை, எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளில், கட்டுப்பாடற்ற சட்ட நடைமுறைகள் உள்ளதால், அதிக அளவில் விவாகரத்துக்கள் நடக்கின்றன. ஆண்களை பொறுத்தவரை, எந்த சட்ட நடைமுறையையும் பின்பற்றாமல் விவாகரத்து செய்துவிடலாம். ஆனால், பெண்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், கடுமையான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.”ஷரியத்’ சட்டப்படி, கோர்ட்டுக்கு ஆண்கள் போக வேண்டியதில்லை, ஒருவர் நான்கு மனைவிகளுடன் கூட குடும்பம் நடத்தலாம். எகிப்து நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடியே 80 லட்சம் இதுவரை, 25 லட்சம் பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாயில் பிளாஸ்திரி ஒட்டி மருத்துவ மாணவர்கள் நூதன போராட்டம்..!!
Next post குழந்தைகளின் விபரங்களை இணையத்தில் வெளியிடுவதற்கு தாய்லாந்தில் தடை