3,280 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டும் சவுதிஅரேபியா…!!

Read Time:1 Minute, 44 Second

7b933ff1-20ef-4f4c-ab66-3e004e084155_S_secvpfஉலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டுகிறது.

துபாயில் புர்ஜ்கலியா என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக உள்ளது. இது 2700 அடி உயரம் கொண்டது.

ஆனால் அதை மிஞ்சும் வகையில் மிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 3280 அடி உயரத்தில் 200 மாடிகள் கட்டப்படுகிறது.

இது துபாயில் கட்டப்பட்டுள்ள புர்ஜ் கலிபாவைவிட 550 அடி உயரமாகும். அதே நேரத்தில் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2 மடங்கு உயரமாகும்.

இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் கட்டப்பட்டு வருகிறது. ரூ.7920 கோடி செலவில் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 26 மாடிகள் கட்டப்பட்டுள்ளது.

அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020–ம் ஆண்டில் முடிந்து திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை சவுதி அரேபியா மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

உலகிலேயே 4 மிக உயரமான கட்டிடங்கள் என புர்ஜ் கலியா (துபாய்), தைபே (தைவான்), பெட்ரோனாஸ் டவர் (கோலாலம்பூர்), சியர்டவர் (சிகாகோ) போன்றவை மிகஉயரமான கட்டிடங்களாகும்.

தற்போது சவுதி அரேபியாவில் கட்டப்படும் இக்கட்டிடம் 5–வது மிக உயரமான கட்டிடமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர்…!!
Next post பாகிஸ்தானில் 134 குழந்தைகளை பலிவாங்கிய ராணுவப் பள்ளி துப்பாக்கிச்சூடு: 4 தலிபான் தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!