ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி

Read Time:1 Minute, 52 Second

ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன் ஹோவர்டிடமிருந்து 11 ஆண்டுகள் கழித்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹொவர்டைக் காட்டிலும் 20 வயது குறைவான நாட்டின் புதிய தலைவர் கெவின் ருட், முன்பு ராஜீய அதிகாரியாக இருந்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்று உறுதியளித்ததோடு, நாடு தனது சரித்திரத்தில் ஒரு புதிய பக்கத்தை எழுதப்போகிறது என்று வெற்றிபெற்ற பின்னர் முதன்முதலாக கருத்துவெளியிட்ட கெவின் ருட் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உறவுகள் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும், ஆஸ்திரேலியா இராக்கிலிருந்து தனது படைகளை திருப்பியழைக்கத் துவங்கும் என்று சிட்னியிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். புவி வெப்பமடைதலை தடுப்பது தொடர்பிலான கியோட்டோ ஒப்பந்தத்தில் உடனடியாக கையொப்பமிட கெவின் ருட் திட்டமிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனைவி சுட்டுக்கொலை; சந்தேகத்தில் புத்தளம் இராணுவ கட்டளைத்தளபதி கைது
Next post பாதையில் ஏறுவதில் ஏற்பட்ட தகராறினால் இளைஞரை சுட்டுக் கொன்ற ஊர்காவல்படை வீரர்