பொது இடங்களில் பெண்களை உரசிப்பார்க்கும் ஆண்களுக்கு எதிராக போராட்டம்..!!

Read Time:2 Minute, 24 Second

95c6512c-ed84-4807-924e-b6810d1fff77_S_secvpfசமூக வலைதளமான டுவிட்டர் பல்வேறு அறப்போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் பிரச்சனைகயைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ள உதவும் இது, பிரச்சனைகளை எதிர்த்து போராட விரும்புபவர்களை வெறும் ‘ஹாஷ்டேக்’ மூலம் ஒருங்கிணைக்கின்றது.

பாட்டுக் கச்சேரிகளுக்கு செல்லும்போது, கூட்டத்தோடு கூட்டமாக வந்து தமது விருப்பத்துக்கு எதிராக தம்மைத் தொடும் ஆண்களுக்கு எதிரான போராட்டமாக #GirlsAgainst என்ற இயக்கத்தை லண்டன் நகரைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் டுவிட்டர் வாயிலாகத் தொடங்கியுள்ளனர்.

பொது இடங்களில் தம்மை விட பலம் வாய்ந்த, அதீத உயரமாக உள்ள ஆண்கள் உரசும்போது, பெண்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களை எதிர்த்து கூட்டத்துக்குள் ஒன்றும் செய்ய முடியாமலே போகின்றது.

இந்தப் பிரச்சனையைப் பற்றி வெளியில் சொல்ல முடியாமல் நொந்துபோகும் பெண்களுக்கு ஆதரவாக, இதுபோன்ற சூழ்நிலைக்கு உள்ளான தோழிகளில் ஒருத்திக்காக, குரல்கொடுக்கும் விதமாக இந்த இயக்கத்தை ஐந்து மாணவிகள் இணைந்து தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே, இந்தப் பெண்கள் இயக்கத்துக்கு ஆதரவாக இங்கிலாந்தின் பிரபல ‘பாப்’ குழுக்கள் தமது கச்சேரியில் இத்தகையவர்கள் கலந்துகொள்ளத் தேவையில்லை எனவும், இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் தயங்காமல் காவலரிடம் தெரிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

நம்மூரின் பேருந்துகளில் இதுபோன்ற தொல்லைகளுக்கு உள்ளாகும் பெண்களும், தமது பிரச்சனையை எதிர்த்து போராட முன்வருவர் என எதிர்பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்கூபி டூவை விட அதிகமாக பயப்படும் 6 அடி உயரமுள்ள நாய்…!!
Next post சீனாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பொன்னிற இலைகளைத் தூவும் 1400 ஆண்டு பழைய கிங்கோ மரம்…!!