பிரான்ஸில் துக்ளக் இதழுக்கு தீவைத்து மகிழ்ந்த புலிப்பினாமிகள்..!

Read Time:4 Minute, 59 Second

france.giffrthuglak-paris.jpgபிரான்ஸில் புலிகளின் புனாமிகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபல ‘துக்ளக்” சஞ்சிகை தமிழ்ச்செல்வனின் செயற்பாடு தொடர்பாக செய்தி வெளியிட்டதால் அச்சஞ்சிகையை தீவைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பரிசிலுள்ள லாச்செப்பல் என்னுமிடத்தில் வி.எஸ்.ஒ எனும் வர்த்தக நிலையத்திற்கு பின்புறத்தில் இவ்வெரிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பிரான்சிலிருந்து வெளியிடப்படும் புலிகளின் சார்பு பத்திரிகையான ஈழநாடு பத்திரிகையின் ஆசிரயரான யாழ்ப்பாண மாவட்டம், அனலைதீவைச் சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 55) மற்றும் முன்னாள் புளொட் உறுப்பினரான சிவா சின்னப்பொடி என்பவரும் மற்றும் வி.எஸ்.ஒ எனும் வர்த்தக நிலையத்தில் தொழில் புரியும் மூன்று பேரும் இணைந்தே இவ்வெரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்த மக்களை பயத்துடன் வைத்திருப்பது புலிகளுக்கு கீழ்படிவுடன் வைத்திருப்பது அவர்கள் வாசிப்பது, சாப்பிடுவது, தொலை பேசிக்கு பாவிக்கும் சிம் அட்டைகள், தொலைக்காட்சி சனல்களின் தெரிவு, பொருட்கள் வாங்கும் கடைகள் அங்காடிகள், செல்ல வேண்டிய பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இத்தகைய கும்பல்கள்தான் தீர்மானிக்கின்றன.

துக்ளக் சஞ்சிகையை எரிக்கும் அந்த நாலைந்து பேரையும் பார்த்தால் எந்த வேலைக்கும் செல்லாத இவ்வாறு அடாவடித்தனங்கள் மூலம் வயிறு வளர்க்கும் தடியர்கள் என்பதை சட்டென புரிந்து கொள்ள முடியும். இவர்களின் அன்றாடத் தொழில் இத்தகைய வன்முறைகள்தான்.
இவர்களை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதன் ஊடாக நாளடவில் அந்தந்த நாடுகளின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். அண்மையில்தான் நோர்வேயில் புலிகளின் கும்பல்களுக்கிடையே நடந்த மோதல்களில் சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டதும் ஞாபகமிருக்கலாம் இத்தகைய துக்ளக் சஞ்சிகையை எரிக்கும் ஆட்களுக்கும், கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்களும் இவர்களே. இவர்களில் அனேகமானோர் தற்குறிகளாவர்.

பிரான்சில்தான் எல்லை கடந்த பத்திரிகையாளர் சங்கம் இருக்கிறது. இங்கு துக்ளக் சஞ்சிகை எரிக்கப்பட்ட விடயம் இவர்களுக்கு தெரியாமல் போயிருக்காது. இவர்கள் இது விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஒரு முக்கியமான மாற்று சஞ்சிகை துக்ளக் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதம் புலிகளின் ஜனநாயக விரோத செயல்கள் தொடர்பாக பகிரங்கமாக, அப்பட்டமாக கேள்வி எழுப்புவதென்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் உரிமைகளுக்கான அமைப்பு பிரான்சின் பாரிசை தலைமையகமாக கொண்டே இயங்குகிறது. புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும் தமது வன்முறை போக்கை அன்றாட வாழ்வின் மீதான அச்சுறுத்தலை கைவிடவில்லை என்பதையே இது காட்டுகிறது. அண்மையில் லண்டனில் கைக்கோடரி உட்பட கூரிய ஆயுதங்கள் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. கும்பல் மனோபவம் கொண்ட புலிகளின் வன்முறை, குரூரத்தனங்கள் மீது ரசணை கொண்ட ரசிகர் கூட்டமொன்று உலகளாவியளவில் காணப்படுகிறது. இது அந்தந்த நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கும் மிகவும் ஆபத்தானதாகும். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மீது இந்த பாசிச வன்முறைக்; கும்பல்கள் ஒரு மேலாதிக்கத்தை செலுத்தி வருகின்றன.

frthuglak-paris.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சொத்துக்காக பெற்ற மகளையே கள்ளக் காதலன் மூலமாக கடத்திய தாய்…!
Next post தேர்தலுக்கு முன்னர் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்?