தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்…!!
குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவரது மனைவி ராணி (30). இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது.
இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளும் உள்ளனர். ரவி அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் சவாரி கிடைக்காத நாட்களில் பெயிண்டிங் வேலைக்கும் செல்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போல ரவி கருங்கல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டு உரிமையாளரின் மனைவியும் அவரது 2 குழந்தைகளும் ரவியுடன் அன்பாக பழகினர்.
பெயிண்டிங் வேலை முடிந்த பின்பும் ரவி, அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதில் வீட்டு உரிமையாளரின் மனைவியுடன் ரவிக்கு நெருக்கம் ஏற்பட்டது.
அப்போது ரவி, அந்த பெண்ணிடம், இன்னும் தனக்கு திருமணம் ஆக வில்லை என கூறினார். இதனால் அந்த பெண், ரவியுடன் அதிக நெருக்கம் காட்டினார். இவர்களின் பழக்கம், அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்றார்.
இந்த தகவலை அந்த பெண், ரவியிடம் கூறி அழுதார். அவர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதோடு, அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்தார்.
அதனை நம்பி அந்த பெண், குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார். அவருக்கு ரவி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து தங்க வைத்தார். அங்கு அந்த பெண்ணுடன் ரவி ரகசியமாக குடும்பம் நடத்த தொடங்கினார். மாதத்தில் பல நாட்கள் அவர் மனைவி ராணியை சந்திப்பதில்லை. இதனால் ராணி சந்தேகம் அடைந்தார். அவர் ரவியின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார்.
இது தெரியவந்ததும் ரவி, கள்ளக்காதலியை பிரிந்து மனைவி ராணியுடன் தங்க தொடங்கினார். கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார். அவருடன் பேசுவதையும் நிறுத்தி கொண்டார்.
ரவியை காணாமல் திகைத்த கள்ளக்காதலி அவரது விலாசத்தை தேடி ரீத்தாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு சென்ற பின்புதான் ரவிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார்.
உடனே அவர் ராணியிடம் சென்று ரவி தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்று கூறியதோடு, அவரோடு தான் குடும்பம் நடத்தி வந்ததையும் போட்டு உடைத்தார். கணவர் கைவிட்டதால் இனி ரவி தான் தனக்கு துணை என்று கூறியதோடு, அவரை என் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ராணியை எச்சரித்தார்.
இதை கேட்டு பதறி போன ராணி, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகாரை தெளிவாக கேட்டு உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போலீசாரை அனுப்பி ரவியையும், அவரது கள்ளக்காதலியையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரவி போலீசாரிடம் சபலத்திற்கு ஆட்பட்டு மனைவி, குழந்தைகளை ஏமாற்றி தவறிழைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி மனைவி, குழந்தைகளுடனே வாழ விரும்புகிறேன் என்று கூறி அழுதார். போலீசார் அவரை சமரசப்படுத்தி ராணியுடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது ரவியின் கள்ளக்காதலியும் கதறி அழுதார். ரவியை நம்பி கணவரை பிரிந்து வந்தேன். இப்போது ரவி இல்லா விட்டால் என் வாழ்க்கை என்னாவது என்று தேம்பி அழுதார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையை கேட்டிருக்கிறேன். இப்போது அது என் வாழ்வில் நடந்து விட்டதே என்று கதறினார்.
போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் அழைத்தனர். அவர்கள் வந்ததும், அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Average Rating