காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

Read Time:3 Minute, 40 Second

காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இருந்து ஒரு நாட்டை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை எடுப்பது, காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் நடவடிக்கை குழு தான். இந்த குழுவில் மால்டா, பிரிட்டன், இலங்கை, பபுவா நியூகினியா, கனடா, மலேசியா, லெசோதோ, தான்சானியா ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவின் தலைவர் மால்டா வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பெர்னாண்டோ. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தி, அரசியல் சட்டம் முடக்கப்பட்டதும் இந்த குழு கூடி விவாதித்தது. 10 நாட்களுக்குள் தனது முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என கடந்த 12ம் தேதி இந்த குழு கெடு விதித்தது. இருப்பினும், பாகிஸ்தானில் அவசர நிலை தொடர்ந்தது. இதையடுத்து, இந்த குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு 5 மணி நேரம் நடந்தது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தானை சஸ்பெண்ட் செய்வது என அப்போது ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அமைப்பின் பொதுச்செயலர் டான் மெகினான் அறிவித்தார். பாகிஸ்தானில் ஜனவரியில் பொதுத்தேர்தல் நடந்த பிறகு, இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் நடவடிக்கை குழுவிடம் பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் முகமதியான் சூம்ரோ, வெளியுறவு அமைச்சர் இனாம்-உல்-ஹக் ஆகியோர் போன் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், அதற்கு பலன் இல்லாமல் போய்விட்டது.

சஸ்பெண்ட் அறிவிப்பு வெளியானதும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது சாதிக் கூறுகையில், “இந்த நடவடிக்கை அர்த்தமில்லாதது, நியாயப்படுத்த முடியாதது. பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்படுவது இது இரண்டாவது முறை. 1999ம் ஆண்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ராணுவ புரட்சி செய்து முஷாரப் ஆட்சியை கைப்பற்றினார். இதையடுத்து, காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு தான் இந்த சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தில் கணவன் வழக்கு
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… ***உலகத்தில் அதிஉயரமான கட்டிடங்கள் இவை!!!!!