பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புகள்…!!

Read Time:2 Minute, 9 Second

medical_tips_002-615x406உடல்நிலை சரியில்லை என்றாலே உடனடியாக மருத்துவரிடம் செல்லாமல், சில எளிமையான இயற்கை வைத்திய முறைகளின் மூலமே சரிசெய்யலாம்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* எப்போதும் மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

* ஆவாரம்பட்டை, சுக்கு, ஆகியவற்றை சம அளவு எடுத்து 400மி. தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 3 வேளை பருகி வர கை, கால் வீக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

* குப்பை மேனி இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்து வர குணமாகும்.

* அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச நோய் தீரும்.

* கிராம்பு, கற்பூரம், ஒமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து கிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்ப்பவர்களை ஈர்க்கும் பிஞ்சு மழலையின் முதல் அனுபவம்..!!
Next post நாகதீபவின் பெயர் மாற்றப்பட வேண்டியதில்லை – சம்பந்தன்…!!