ஊடகவியலாளர் ஆர்தர் வாமணன் கைதானமை உரிமை மீறல் என மனுத்தாக்கல்

Read Time:1 Minute, 34 Second

சண்டேலீடர் பத்திரிகை ஆர்தர் வாமணன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமாகும் என்று குறிப்பிட்டு அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஜீ.ஜீ.அருட்பிரகாசத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில் பொலீஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவு பொறுப்பதிகாரி, திணைக்கள சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர், கைத்தொழில் அபிவிருத்தியமைச்சர் மனோ விஜயரட்ண உட்பட சிலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 24ம்திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மனுதாரர் கைதுசெய்யப்பட்டமை சட்டவிரோமானதென்றும் இதன்மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காக நஷ்டஈடாக ஒருகோடி ரூபாவைப் பெற்றுத்தருமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி
Next post “அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை