படமாகும் ரஜினி சொன்ன பாபா கதை!

Read Time:2 Minute, 18 Second

rajini_070913_6.jpgபாபா’ வை மறக்க முடியாது. அப்படியே மறந்தாலும் ‘பாபா’ படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை ஒருபோதும் மறக்க இயலாது. பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், இயேசு பாபாஜியிடம் குருகுலம் கற்றதாகவும் சொன்னார் ரஜினி. இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியொரு கதையா என மருத்துவர் ராமதாஸ் ஒருபக்கம் எகிற, இரண்டாயிரம் வருஷமாக இருப்பவரால் ஜனங்களுக்கு துரும்பளவாவது பயன் உண்டா? யாருக்கும் பயன்படாதவர் இரண்டாயிரம் வருடம் வாழ்ந்தால் என்ன, இரண்டு வருடம் வாழ்ந்தால் என்ன என்று அறிவுஜீவிகள் இன்னொருபுறமும் உறும, பாபா கதை காமெடியானது. இப்போது இதே கதை ஹாலிவுட்டில் படமாகிறது! இயேசுவின் 13 வயது முதல் 30 வயதுவரை உள்ள வாழ்க்கை குறித்து பைபிளில் எந்த செய்தியும் இல்லை. இந்த வருடங்களில் அவர் ஒரு பெண்ணை காதலித்து மணந்ததாகவும், இந்தியாவுக்கு வந்து பவுத்த மற்றும் இந்து தர்மங்கள் குறித்து கற்றதாகவும் ஒரு கதை உண்டு.

22112007-thn10image2.jpgஇயேசுவுக்கு ரத்த வாரிசு உண்டு என்ற பின்னணியில் தயாரான ‘டாவின்சி கோட்’ டாலர்களை அள்ளியது. அதை மனதில் வைத்து, இயேசுவின் 13 முதல் 30 வயதுவரையான வாழ்க்கையை காதல், கல்யாணம், இந்திய வருகை ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கிறார்
ஹாலிவுட் இயக்குனர் Drew Heriot.

இந்தக் கதை எழுத்தாளர் Levi H. Dowling எழுதிய நாவலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.இயேசுவின் இந்திய வருகை குறித்த எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களுக்கு இயக்குனர் Drew Heriot க்கு ரஜினியை தவிர வேறு தகுதியான நபர் கிடைக்கமாட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்
Next post கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தில் கணவன் வழக்கு